March 22, 2008

பாமரன் பதிவொன்று

15 வேலம்பாளையம்.
இதுதான் அவனது ஊர். தமிழக வரைபடத்தில் தேடிப்பார்த்தாலும்தென்பட்டுவிடாத கிராமம் அது. எண்ணி எழுபதே வீடுகள். ஆறேழுகிலோ மீட்டர்கள் நடந்தேதான் போக வேண்டும் அவனது ஊருக்கு.
அவனது அப்பன் செங்கோடன், தானே நெய்த துணிகளைத்தலையில் சுமந்து ஊர் ஊராய் விற்று வயிறு வளர்த்து வந்தவன்.கணக்கய்யர் பையனும், மணியகாரர் மகளும் வண்டி கட்டிக் கொண்டுபோய் படித்து வர - அவனோ அந்த ஆறேழு கிலோ மீட்டரும்நடையாய் நடந்து டவுனிலுள்ள பிஷப் ஸ்கூலுக்குப் படிக்கப் போனான்.
அப்போதுதான் திராவிட இயக்கங்கள் திரைப்படத் துறையில் தூள்கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.
“தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால்தீயைத் தாண்டியிருக்கிறேன்”
‘கருணாநிதின்னு உங்கள மாதிரி ஒரு பையன் எப்புடி எழுதீருக்கான்பாருடா’ என்று அவனது தமிழாசிரியர் ஊட்டிய உணர்வுகளினூடேஅவன் வளர்ந்தான்.
அதுதான் அன்றைக்கு அவனுக்கு ஊட்டப்பட்ட அடிப்படைஅரசியல். காவிக்கு கறுப்பு காவடி தூக்காத காலம் அது.
தேர்வு முடிவுகள் வந்தபோது அந்தக் கூட்டத்துக்கே பெருங்கொண்டாட்டம்.
15 - வேலம்பாளையத்தில் பத்தாவது பாஸென்பதுலேசுப்பட்ட விஷயமா என்ன? ராசுக்குட்டி பாசானது அந்த கிராமத்துக்கே‘கலேக்கட்டரு’ பதவி கெடைச்சாப்பல. “வள்ளியம்மா பையன்பத்தாவது பாசாயிட்டானாமா….” செங்கோடம் பையன் பாசானதுதெரியுமா உனக்கு?”
அவனது நெருங்கிய உறவுகளில் சிலர் சாராயம் குடிப்பவர்களல்ல -காய்ச்சுபவர்கள். சோறில்லாவிட்டாலும் சுயமரியாதையையேசொத்தாகக் கொண்டிருந்தவர்கள் பலர்.
“……புள்ளைக்கு படிப்பெதுக்கு?” என்ற காலத்தில் பத்தாவதுபாசானவனாயிற்றே…உச்சி முகர்ந்தது ஊர். பத்தாதற்கு விவசாயடிப்போவில் வேலைக்கும் போய்ச்சேர…தேடி வந்தது ‘பெரிய’ இடத்துசம்பந்தம். திருப்பூரின் திசையை மாற்றி கொத்திக் கொண்டது கோவைஅவனை.
திருமணத்திற்குப் பிற்பாடு புகுமுக வகுப்புத் தேர்ச்சியும், பி.காம்பட்டமும் அவனது துணிச்சலுக்கு முன்னே தூசாயிற்று. விவசாயடிப்போவிலிருந்த அவனை விவசாய பல்கலைக் கழகம் தனதுஊழியனாக வரித்துக் கொண்டது. பின்னர் அப்பல்கலையின் முதல்கணக்கு அலுவலர்களுக்கான பட்டியலில் அவனது பெயரும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று அன்றைக்கு.
ஆனால்…’ரைஸ்மில்காரரின் மச்சினன்’ என்பதோ…’அக்ரிகாலேஜின் கணக்கதிகாரி’ என்பதோ…எதுவும் ஏற்புடையதில்லைஅவனுக்கு. சுள்ளி பொறுக்கியும், சாராயம் காய்ச்சியும் வாழ்க்கையைஓட்டி வந்த தனது உறவுகளும், உற்றார்களும் உயர வேண்டுமே என்றஉறுத்தல்தான் அவனுக்குள் என்றும் இருந்தது.
அநேக கனவுகளினூடே கல்யாணம் பண்ணிக் கொண்டவனுக்குமகன் பிறந்தபோது மட்டும் தலைகால் புரியவில்லை. பேர்வைப்பதற்குக் கூட பெரும்பொழுது ஆயிற்று. சுத்தமான தமிழ்ப்பெயராய்…அதுவும்…இதுவரை எவரும் வைக்காத தமிழ்ப் பெயராய்…கவுந்தப்பாடி தமிழாசிரியர் குழந்தைசாமியும், அவனும் யோசித்துயோசித்து பெயரிடுவதற்குள் நான்கு 365 நாட்கள் நகர்ந்து போயிற்று.
தனது தந்தை செங்கோடனைத் ‘தூக்கிக் கொண்டு’ போன போதுகூடஅழுகை வரவில்லை அவனுக்கு. ஆனால், அண்ணாதுரை இறந்தபோதுவீட்டிலிருக்கிற ‘மர்பி ரேடியோ’ முன்பு அவன் குலுங்கிக் குலுங்கிகுமுறியது அவன் மகனுக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது.
மனைவியோடு கோயிலுக்குப் போனாலும் வாசற்படியோடுநின்றுவிடுவான் அவன். கோயில் திண்ணையிலும் ‘முரசொலி’ விரித்துஅமருவதுதான் அவனுக்கு அலாதி சுகம். நூர்தீன் பெரியப்பாதான்அம்மாவை கோயிலினுள்ளே கூட்டிப்போய் ஒவ்வொன்றாகவிளக்குவார். அவன் தனது தலைமுறைக்கு சாதி கடந்தும், மதம் கடந்தும்மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தான்.
அவன் தனது மகனை நூர்தீனைப் பெரியப்பா என்றும், தலித் பாலசுந்தரத்தை சித்தப்பா என்றும்அக்கிரகாரத்து முத்துராமனையும், ஆலிவரையும் மாமாவென்றும் அழைக்கப் பழக்கப்படுத்தினான்.
ஆனால் சொந்தங்களை சார் என்று அழைத்தான் அவனது மகன். “என்னடா சம்பு இப்புடி உன் பையனை வளத்திருக்கே?” என்பவர்களது கேள்விக்கு ஒரு நமட்டுச் சிரிப்புதான் அவனது பதிலாக இருக்கும். சிறுபான்மையினர் மீதான நேசம்…தலித்துகளுடனான தோழமை….பிற்படுத்தப்ட்டவர்களுடனான பாசம் என வளர்ந்தவன் அதன்படியே அவனது வாரிசையும் வளர்த்தான்.
ஆயினும் அவனது பொறுமைக்கு நேரெதிராய் ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட அவனது மகன்.அவனது அமைதிக்கு நேரெதிராய் ஆர்ப்பாட்டத்தைத் தவிர வேறெதுவுமறியாத அவனது மகன்.இருப்பினும் எல்லாவற்றையும் அனுமதித்தான் அவன். கருத்துச் சுதந்திரத்திற்கு கடிவாளமிடவில்லைஅவன். மகனைத் தோழனாய்ப் பார்த்தான் அவன்.
மகனது கல்லூரி லீலைகளையும், கலாட்டாக்களையும்கூட சுற்றுப்புறத்தில் சீரழிந்திருந்தகலாச்சாரச் சூழலினையும் கவனத்தில் கொண்டே கண்டித்தான் அவன்.மகனது கிறுக்குத்தனங்களையும், குறும்புகளையும் களையச் சொன்னான் கனிவோடு.
மகனும் பிற்பாடு தமிழ் மீதும் , திராவிடத்தின் மீதும் தனது பார்வையைத் தழையவிட….அவனுக்குள் ஒரு பெருமிதம்.
‘ஆறுமுறை மின்சாரம் தாக்கியும் உயிரிழக்காத அர்ஜன்டைனா மனிதர் அலெக்ஸ் இவர்தான்’ எனஅவனது மகன் எழுதிய அபத்தத் துணுக்குகள் அவனுக்கு ஏற்புடையதில்லையாயினும்….துவக்கம் துவண்டாலும் தொடரத் தொடர துளிர் விடக்கூடும் எனத் தெரிந்து வைத்திருந்தான் அவன்.
நேரடியாக ஊக்குவிக்காவிடினும் மறைமுகமாக மனதுக்குள் ரசித்தான் அவன்.மகன் எழும் முன்னரே வாசகர் கடிதத்தில் அவனது பெயர் தென்படுகிறதா எனத் தேடிப்பார்த்த பின்னரே தேநீர் அருந்தினான்.
அவன் தன் மகனுக்கு விட்டுச் சென்றதெல்லாம்…சாதி…மத…மொழி…இனம்…நிலம் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்ததுதான்.அவன் போய்ச் சேர்ந்த பிறகு அந்த வேலம்பாளைய வீட்டை பதினேழாயிரத்துக்கு விற்றுவிட்டுஊர் வந்து சேர்ந்தார்கள் அவனது மனைவியும் மகனும்.
“வெல்டன் Mr. கோமல், தூள் கிளப்பிவிட்டீர்கள்” என வாசகர் கடிதம் எழுதுபவனாய்….பூவாளிக்கும், முத்தாரத்திற்கும் துணுக்கு எழுதுபவனாய்….‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று அச்சடித்து பத்திரிக்கை நடத்துபவனாய்….பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டு சிறுசிறு புத்தகங்கள் வெளியிடுபவனாய்….வளர்ந்த மகன் பிற்பாடு வெகுஜனப் பத்திரிக்கைகளால் ஈர்க்கப்பட்டு சினிமா, அரசியல் விமர்சகனாய்“வளர்ந்த” போது சூட்டிக் கொண்ட பெயர் பாமரன்.
மகனுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் துயரமெல்லாம் தனது எழுத்தை மறைந்திருந்தாவது படிக்க…
அந்த 15 - வேலம்பாளையத்து
‘ராசுக்குட்டி’ என்கிற
‘சம்பு’ என்கிற
செ.சண்முகசுந்தரம், பி.காம்., இல்லையே என்பதுதான்.

March 16, 2008

கலைஞர் கவிதை

"ஆர்ப்பாட்டமென்ன, போர்ப்பாட்டு என்ன,
"சார்பட்டா'' பரம்பரை யென்ற
சவுக்கடிப்பேச்சுத் தான் என்ன,என்ன?
வேர்பட்டுப் பிளக்கின்ற பூமியிலே
மழைநீர்பட்டு முளைக்கின்ற காளான் போலே
ஒரு கட்சி உதிக்கும், மறு கட்சி பிறப்பதற்குள்!
இருகட்சி இருள் போக்குமென்று
இங்குள்ள ஏடெல்லாம்
திருவிழா தினந்தோறும் நடத்திப்பார்த்து,
ஏமாந்த காரணத்தால்,
இருவிழி மூடிக்கொண்ட குருடுகளாய் ஆகிவிட்டார்!
நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்
உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்ததம்மா!
நடிகர் இருவர் ஆட்சியிலே:
நாடுவரப் போகின்றதென்று !
நடுநிலை ஏடுகள் கூட
நம்மீது கெடுமதி கொண்டு சீறி
நன்மையெது தீமையெது என்பதறியாது
அறவழிகள் மீறி,
உண்மையைப் பொய்யென்றும்,
பொய்யைப் புனித மென்றும்
வெளியிட்டார் செய்திகளை;
அவையனைத்தும்ஒளிபட்ட இருளைப்போல்
ஓடி ஒளிந்ததம்மா!
நூற்றுக்கு ஒரு விழுக்காடு இடம்கூட
இவர்தம் பொய்க்கூற்றுக்குச்செவி சாய்த்து
வெற்றியெனக் கிடைக்க வில்லை!
கறுப்புநிற எம்.ஜி.ஆர். என்றும்,
கர்மவீரர் தொண்டர் என்றும் கர்ச்சித்தோர்
கட்டுத்தொகையைக்கூட இழந்து நிற்கும்
பரிதாபத்தை என்ன சொல்ல?
எறும்புத்தலைகளை இமயமலைகளாய்
வர்ணித்த இதழாளர்களே ;
கரும்பினும் இனிய செய்தியாய்
கழகக் கூட்டணியன்றோ
பெருவெற்றி ஈட்டியது இன்று!
அன்பு உடன்பிறப்புக்காள்,
அதற்குள் துள்ளிக்குதிக்காமல்-
அடுத்து வரும் வெற்றிகட்கு
இது அச்சாரமென
அயராது உழைத்திடுக
---------

March 1, 2008

படித்ததில் பிடித்தவை ...

***ரோஜாப் பூக்களை
பயிராக்குகிறேன்.....
நானொரு காதல் தோட்டக்காரன்
விழி அம்புகளைக் கொண்டு
உன்மேல் எய்கிறேன்
நானொரு காதல் வேட்டைக்காரன்
வீட்டில் சோறுஇருந்தும்
விரதம்இருக்கிறேன்....
நானொரு காதல் பக்தன்
உனது வாழ்க்கைக்கு
தலைமை தாங்குகிறேன்
நானொரு காதல் தலைவன்
உனது இதய சிம்மாசனத்தில்
வீற்றிருக்கிறேன்
நானொரு காதல் மன்னன்.....

***தேய்வதும் வளர்வதும்
நிலவுக்குஅழகு என்றால்...
உதிர்வதும்மலர்வதும்
பூக்களுக்குஅழகு என்றால்...
கரையைத்தொடுவதும்பிரிவதும்
அலைகளுக்குஅழகு என்றால்...
தோழனே!தோல்வியும்வெற்றியும்
உன் வாழ்க்கைக்குஅழகு தான்!

***என் புல்லாங்குழலில்
புகுந்து வந்த காற்றில்
உன் பெயர் கேட்கலாம்!
என் பேனாவிலிருந்து
வழிந்த மைத்துளிகளில்
உன் அழகு பார்க்கலாம்!
*உன் செம்பாதச் சுவடுகளை
பின் தொடர்ந்தால்
சொர்க்கம் போகலாம்...
நீ தந்த சுகங்களை
அச்சுக் கோர்த்தால்
'சுக நானூறு' படிக்கலாம்
பெண்ணே!நீ
என் நெஞ்சுக்குள்தஞ்சம்
புகுந்த வானவில்!
நீயின்றி வாழ்க்கை
எனக்குகானல்நீர்!.....

***பத்து மாதங்களுக்கு முன்
ஒரு நாள் எட்டிப் பார்த்தது
வரவா என்றதுதடுத்தேன்
பயனில்லை!
உருக்கொண்ட பின்புதான்உணர்ந்தேன்
காதல் குழந்தை நெஞ்சில் குடிவந்ததை!
பரவசப்படுத்தியதுவானில் மிதந்தேன்
பைத்தியமாக்கியதுமனதை
இழந்தேன்
ஆனாலும்அழித்து விட்டேன்
வெளிவருமுன்பு!
இன்று மீண்டும் துளிர்க்கிறது
என் செய்வேன்
நேசத்துக்கு அடிமையான மனதை!!

***உன் ஸ்பரிசத்தை உணர
'மழை' ஆன போது
குடைக்குள் சென்று ஒளிந்தாய்!
'அலை' ஆனபோதோ
ஒதுங்கிச் சென்றாய்!
இன்று நான் 'சிலை'ஆன பிறகு
என் ஸ்பரிசத்தை தேடுகிறாய்
நானோ மெஸ்மரிசமாய்!

***நானுனைத் தேடும் வேளைகளில்
நீயோ
நீயெனைத் தேடும் வேளைகளில்
நானோ
ஒருபோதும் ஒருவருக்கொருவர்
சந்தித்ததேயில்லை!
நட்ச்சத்திரக் கூட்டங்களிலிருந்து
ஒரு நட்சத்திரம்நிலாவைப் பார்ப்பதுபோல்
நீயும் நானும்நானும் நீயும்!
என்றாவதுசந்திக்கும்
அந்த எண்ணிலடங்காசந்தோஷ நொடிகளில்
காதலைநம் காதலிடம் சொல்வதைத் தவிர
சகலமும் பேச
உறக்கம் வராத இரவுகளில்
விளங்கமுடியா சொப்பனங்கள்!
ஒற்றை தரிசனத்தில்
உலகின் அத்தனை புத்தகங்களையும்
படித்துவிட ஞானியாகிறேன்!
உனைத்தேடும் என்மனத்தவத்தில்
என்னையே மறக்கும் நிலையடைய
உன்னில் உறுதியாய்நிலைத்து மகிழ்கிறது
எந்தன் காதல்
உன் மனதில்
நானேயென்றதெளிவான நம்பிக்கையில்!

***ஊசி முனை கொண்டு
இதயத்தைக் குத்துவதைக் காட்டிலும்
பலத்த வலி என்பது இது....!
செருப்பால்அறைவதைக் காட்டிலும்
கொடுந் தண்டனை என்பது இது....!
பேசாமல்வதைக்கும் மவுனத்தைக் காட்டிலும்
பேசிக் கொல்வது என்பது இது...!-
ஆழத்திலும் ஆழமானஎன் நேசத்தையும்
மாற்றிக் கொள்ள இயலாதஎன் மனதையும்
அறிந்த பிறகும் கூட
மறுபடி மறுபடி என்னை
அண்ணா என்றே அழைக்கும்
ஆசைத் தோழியின்அந்த ஒரு வார்த்தை....!
***கல்லைசேதப்படுத்திய
உளியால்
சிற்பம் பிறந்தது!
என் நெஞ்சைசேதப்படுத்திய
உன் விழியால்காதல் பிறந்தது!

***திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!
சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!
பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது-
அன்பேஉன்னை நீங்கும் போது
எனக்குஉலகமே இருண்டு போகிறது...!

***அன்னை சுமை என்று
அனாதை இல்லத்தில்தள்ளிவிட்டவனே
உன்னைச் சுமையென்று
தாய் ஒரு நிமிடம்நினைத்திருந்தால்
உதிரத் துளிகளாய்
சிதறிப் போயிருப்பாய்
குறைப் பிரசவமாய்
குலைந்து போயிருப்பாய்.

***தடுக்கி விழச் செய்தாலும்
மேடு பள்ளங்களும்வளைவு நெளிவுகளும்
எப்போதுமேஆபத்தானவைதான்...
பாதையிலும் சரி...
பாவையிலும் சரி...!