மயில் இறகே மயில் இறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே
மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
உயிரைத் தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே !
உலக மொழியில் வரும் எல்லாமே நீர் எழுத்து
காதல் தான் கல் எழுத்து அன்பே ..
மயில் ...
மதுரை பதியி மறந்து உன்
மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா இங்கு
வைகை யில் வைதிடுகை
பொதிகை மலியி பிரிந்து என்
பார்வை யில் நீந்துது தென்றல்
அதை நான்
அதை நான்
பிடித்து மெல்ல அடைத்தேன் மனச்சிறை யில்
ஒரே இலக்கியம் நம் காதல்
வான் உள்ளவரை வாழும் பாடல் !
தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
கவி ஆற்றிட நீ வருவாய்
ஒன்றாய் இரண்டாய் மோ ஒன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா
பால் விளக்கங்கள் நீ கூறேன்
ஊர் உறங்கட்டும் uரைப்பேன் கேளு..