உண்மையில்
நான் உன்னை காதலிக்கவில்லை ..
காதலைத்தான்
காதலிக்கிறேன் .!
காதல் மதுவை
அளவுக்கு மீறி
குடித்துவிட்டேன்
அதனால்
உனக்கும் எனக்கும்
இடையே
வித்தியாசம் தெரியவில்லை .!
இதயமே .!
எச்சரிக்கையாய் இரு
வழியெல்லாம்
கன்னி வெடி .!
உன் முதல் பார்வை
எனை சிலுவையில் அறைந்தது
மறு பார்வை
மறு உயிர்ப்பை தந்தது .!
என் தனிமை
சுடும் வடைகளை
திருடிசெல்லும்
காக்கை நீ .!
இரட்டை கதவுகள் நாம்
காதல் தான் தாழ்பாள் .!